சீரற்ற காலநிலையால் 22, 338 பாதிப்பு! 192 குடும்பங்கள் இடம்பெயர்வு!!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். 174 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அடை மழை ,வெள்ளம் மற்றும் மண்சரிவால் 6 மாவட்டங்களில் 5, 357 குடும்பங்களைச் சேர்ந்த 22, 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

192 குடும்பங்களைச் சேர்ந்த 690பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Related Articles

Latest Articles