ஜனாதிபதிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை – மனோ தகவல்!

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாமல் அமையும் சர்வக்கட்சி அரசில், அங்கம் வகிக்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவுடன் நாம் உடன்படுகின்றோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், ஜனாதிபதியை பாதுகாத்துக்கொண்டு, எமது முதுகில் ஏறி அரசியல் செய்வதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.

எங்களிடம் அரசியல் அஸ்திரங்கள் உள்ளன. உரிய நேரத்தில் அவை ஏவப்படும். தற்போது அவசரப்படமாட்டோம். பாத யாத்திரை முடிந்த பிறகு, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பிரேரணைகள் கையளிக்கப்படும்.” – என்றார் .

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles