33ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்தும் நவலோக்க மருத்துவமனைக் குழுமம்

இலங்கையின் தனியார் வைத்தியசாலைத் துறையில் முன்னோடி வர்த்தக நாமமான நவலோக்கமருத்துவமனைக் குழுமம் தனது 33ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை டிசம்பர் 30ஆம் திகதிவெற்றிகரமாக நடத்தியது. இந்தப் பொதுக் கூட்டமானது கொழும்பு பங்குச் சந்தையின் விதிமுறைகள்மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆன்லைனில் நடத்தப்பட்டது.

நவலோகா மருத்துவமனைக் குழுமத்தின் 33வது பொதுக் கூட்டத்திற்கு நவலோக ஹாஸ்பிடல்ஸ்பிஎல்சியின் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பங்குபற்றி இருந்ததுடன், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நவலோக மருத்துவமனை குழுமம் கடந்த வருடத்தின் கடைசி சில மாதங்களில் நேர்மறையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் துறையில் முன்னோடியாகத் திகழும் நவலோக்க மருத்துவமனைக் குழுமம்,கடந்த 37 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனைத் துறையில் தனது தலைமைப் பதவியைத் தக்கவைத்து வருவதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நோயாளிகளுக்கு குறைந்த விலையில் அதன் சிறந்த சேவை மூலம் சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவமனை சேவையை வழங்க முடிந்துள்ளது.

நோயாளிகள் மீதுகவனம் செலுத்தி மருத்துவமனை சேவைகளை பேணுவதன் மூலம், மிகவும் சவாலான காலகட்டத்திலும் நவலோக்க மருத்துவமனை குழுமம் சவால்களை எதிர்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது. நவலோகா மருத்துவமனை குழுமம் தொடர்பில் 1985ஆம் ஆண்டு மூன்றாம் நிலை மருத்துவமனை சேவைகளை வழங்கும் முதல் தனியார் துறை மருத்துவமனை குழுவாக விளங்கிய நவலோக்க மருத்துவமனை குழுமம், பின்னர் கலாநிதி ஜயந்த தர்மதாசவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சர்வதேச தரத்தை பெற்று குறைந்த விலையில் சர்வதேசதரத்தில் சுகாதார சேவையை வழங்கும் பணியை முன்னெடுத்தது.

முதன்முறையாக இலங்கைக்கு சேவைக்கான அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடி பணியும் மேற்கொள்ளப்பட்டது. நவலோக்க மருத்துவமனைக் குழுமத்தால் தங்க முத்திரையைப் பெற்ற முதல் தனியார் மருத்துவமனை குழுவாகவும் (Joint Commission International's – JCI) மாற முடிந்தது, இது சுகாதாரத் துறையின் தரப்படுத்தலுடன் தொடர்புடைய தங்க முத்திரையாகக் கருதப்படுகிறது.

24 மணிநேர வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, சர்வதேச தரத்திலான வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவு, விமானம் மற்றும் பொது போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இலங்கையின் முதல் தனியார் மருத்துவமனை குழுவாக நவலோக்க மருத்துவமனை குழுமம் உள்ளது. நடமாடும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு தொழில்முறை வீட்டு பராமரிப்பு சேவையும் பராமரிக்கப்படுகிறது.

நவலோக்க மருத்துவமனைக் குழுமம், இலங்கையின் மருத்துவமனை அமைப்பில் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இலங்கையை உருவாக்கும்நோக்கில் தனது சேவைகளை அர்ப்பணிப்புடன் நடத்துகிறது.

 

Nawaloka Hospitals hosts its 33rd Annual General Meeting – Tamil (1)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles