தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும் – அமைச்சர் ஜீவன் எச்சரிக்கை

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா – ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்தினார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டப்பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முன்னெடுத்துவருகின்றார்.

இதன்ஓர் அங்கமாக ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு இன்று சென்றிருந்த ஜீவன் தொண்டமானிடம், தாம் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர்.

” தரிசு நிலங்களை விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரப்பட்டபோதிலும் அதற்கான நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. அதேபோல அரைநாள் சம்பள பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு கிட்டவில்லை. தொழில்சார் சலுகைகளும் மறுக்கப்படுகின்றன.” எனவும் தொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து இவ்விவகாரம் சம்பந்தமாக தொழில் ஆணையாளருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தினார். தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தோட்ட நிர்வாகம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வை வழங்காவிட்டால்  தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ், மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles