தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி அலுவலகத்தில் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.
ஜொன்ங் வூன்ஜின் 2020 ஜூலை 02ஆம் திகதி முதல் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.




