பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வணிக ரீதியான தேயிலை உற்பத்திக்கு, இந்தத் தொழிலாளர்கள் 150 வருடகாலம் பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் போதாது என்பதை அரசாங்கம் உணர்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரச பெருந்தோட்ட அமைப்பொன்றின் கீழ் இயங்கி, பல வருடகாலம் மூடப்பட்டிருந்த வத்துகாமம் கோமரை தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்தத் தொழிற்சாலை ஒன்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரண,
அரச பெருந்தோட்ட யாக்கமும், ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் நட்டத்தில் இயங்கிய காலம் முடிவடைந்து, இன்று வருடாந்த ரீதியில் இலாபமீட்டும் நிலை உருவாகியுள்ளது என்றார். இந்த வெற்றிக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களே காரணம் என்று அவர் தெரிவித்தார்.
