நடுத்தர வர்க்கத்தினருக்கான நிரந்தர வீட்டுத்திட்டம்- அமைச்சரவை அனுமதி

வீடு அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணி இல்லாத நடுத்தர வர்க்கத்தினருக்காக நிரந்தமாக வீடொன்றை பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினருக்காக குறைந்த விலையில் இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஆரம்ப கட்டணமாக 5 இலட்சம் ரூபாவை செலுத்தி வீட்டை பெற்றுக்கொண்டு பின்னர் மாதாந்த கடன் தவணை ஊடாக வீட்டின் மொத்த பெறுமதியையும் செலுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடு அவசியமானவர்களுக்கு வங்கி கடன்களை பெற்றுக்கொடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles