அத்தியாவசிய அரசு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 695 பில்லியன் ரூபா வுக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை 7ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.
இந்தக் குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதம் 8 ஆம் திகதி மாலை 5.30 மணி வரை இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
குறை நிரப்பு பிரேரணையை முன் வைத்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார்.
