நாடு முழுதும் வாக்களிப்பு ஆரம்பம்!

அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம்.

நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணைமூலம் 196 உறுப்பினர்களும், தேசிய பட்டியல் ஊடாக 29 பேரும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

196 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள் சார்பில் 5 ஆயிரத்து 6 வேட்பாளர்களும், சுயேச்சைக்குழுக்களில் 3 ஆயிரத்து 346 இருந்து வேட்பாளர்களுமாக மொத்தம் 8 ஆயிரத்து 352 பேர் போட்டியிடுகின்றனர்.

பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
வாக்கெண்ணும் பணி மாலை 4.15 மணி முதல் ஆரம்பமாகும்.

முதற்கட்டமாக தபால்மூல வாக்கெண்ணும் பணி இடம்பெறும். இரவு 11 மணிக்குள் முதலாவது தேர்தல் பெறுபேறு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles