நாட்டின் பல இடங்களில் திடீர் மின்தடை!

நாட்டின் பல இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டு உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கண்டி,காலி, கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

மின் வினிகர் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கையின் தென் பகுதிக்கான மின் விநியோகம் தடை போட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் மின்சாரத்தடை ஏற்படக்கூடும் என்று அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களுக்கான மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

மின்தடையை சரி செய்வதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles