நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளில் இருந்தும், 11 சுயேச்சை குழுக்களில் இருந்தும் 308 பேர் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளினதும், 4 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதன்படி ஈரோஸ் ஜனநாயக முன்னணி , அருணலு மக்கள் கட்சி , தேசிய மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டன.
ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் திகா , ராதா உதயாவும் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜீவன் ரமேஸ் சக்தி மற்றும் திருமுருகன் ஆகியோரும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு நேற்று (11) வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆமி திகதி நடைபெறவுள்ள பத்தாவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் 11 சயேச்சை குழுக்கள் சார்பிலும் 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நுவரெலியா மஸ்கெலியா (இரட்டை தொகுதி)வலப்பனை கொத்மலை ஹங்குரன்கெத்த ஆகிய நான்கு தொகுதிகளில் இருந்து 605292 வாக்காளர்கள் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.