நேட்டோ நாடுகளை புடின் தவறாக கணித்துவிட்டார் – இறுதி எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா

அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பைடன் நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கிறோம். உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவது தவறான செயல். அதனால்தான் உலக நாடுகளால் ரஷ்ய அதிபர் புடின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேநேரம் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்க படைகள் மோதாது.

ரஷ்ய படை தொடர்ந்து முன்னேறிச் சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புடினின் போர் திட்டமிடப்பட்ட ஒன்று. அதனால்தான் ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை அவர் நிராகரித்துவிட்டார். உக்ரைனில் தாக்குதல் நடத்தினால் மேற்குலக மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என புடின் தவறாக கணித்துவிட்டார்.

நாங்கள் அவற்றுக்கு தயாராகவே இருந்தோம். அதுமட்டுமல்ல, மேற்குலக நாடுகள் நேட்டோ நாடுகளை புடின் தவறாக கணித்துவிட்டார்” என்று உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு கண்டனத்தை தெரிவித்தார் பைடன்.

ஏற்கெனவே பிரிட்டன் அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்த நிலையில், தற்போது அமெரிக்காவும் இதை தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles