பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு; 09 பவுண் நகை கொள்ளை

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வசிப்போர் அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை தொழில் நிமித்தம் அவர்கள் வெளியில் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டார் திரும்பி வந்த போதே, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles