பட்ட பகலில் பயங்கரம்! வத்தளையில் இளைஞன் சுட்டுக்கொலை!!

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், கொலைகளும் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இன்றும் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வத்தளை, எலகந்த பகுதியிலேயே இன்று இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 23 வயதான இளைஞர், ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles