நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.
இந்த வார கூட்டத்தின் போது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைச்சர் கடந்த காலத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர் என்பதுடன் இதன் காரணமாக அரசின் பிரதானிகளுடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளவர் என கூறப்படுகிறது.
இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் நாடாளுமன்றத்திற்குள் மற்றுமொரு சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்த அந்த அமைச்சர் நிகழ்த்தவுள்ளார் எனவும், அது அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
