பஸ் மோதியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி – கலஹாவில் சோகம்

கலஹா பிரதேச வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வைத்து இன்று காலை பஸ் மோதியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் (வயது – 54) பலியாகியுள்ளார்.

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட தெல்தொட்ட பகுதியில் இருந்து, கண்டி கலகெதர பகுதியிலுள்ள தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் பஸ்ஸே அவர்மீது மோதியுள்ளது.

கலஹா பிரதேச வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பிரதான வீதியிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர்மீது பஸ் மோதிய பின்னர், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles