“பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு”

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்றத்தை கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

” நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசு பொறுப்பேற்கும்.” என பிரதமர் கூறினார்.

இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டது. நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

Related Articles

Latest Articles