மலையக அரசியலை மையப்படுத்தி – தேசிய அரசியலையும் இலக்கு வைத்து புதியதொரு கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தீவிர கவனம் செலுத்தியுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன் ஆரம்பக்கட்ட நகர்வாகவே ‘மலையக அரசியல் அரங்கம்’ – எனும் அமைப்பை உருவாக்கியுள்ளார் எனவும், தற்போது ஆசிரியர்கள், இளைஞர்கள், சிவில் சமூக செயட்பாட்டாளர்கள் என பலதரப்பு சந்திப்புக்களை நடத்தி வருகிறார்.
இதில் சிலரிடம் மட்டும் தனது அரசியல் பயணம் குறித்து பேசி வருவதுடன், ஏனைய தரப்பிடம் சிவில் சமூக செயல்பாடுகள் குறித்து மட்டும் பேசி வருவதாக தெரிய வருகிறது.
எவ்வாறாயினும், தேசிய தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராய்ந்த வருவதாக தெரிய வருகிறது.
எனினும், இந்த முயற்சிகளுக்கு தேசிய தொழிலாளர் சங்க செயற்பாளர் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
எனினும், திலகராஜ் போன்ற படித்த சமூகம் மலையக அரசியலில் அங்கம் வகிப்பது முக்கியமானது என அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் எதிர்பார்த்துள்ள.










