புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் போராட்டம்!

மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை நகர சபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (20) காலை குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு எனும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதே,

மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்,

சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டங்களை உருவாக்காதே!

அச்சமின்றி வாழவிடுங்கள்,

இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுங்கள்,

மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதீர்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Latest Articles