தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
பெருந்தோட்ட மக்களை வலுவூட்டுவதற்குரிய திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் எம்.உதயகுமார் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பங்கேற்றிருந்த விஷ்வா புஷ்பாவும் கையொப்பமிட்டார்.
