நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் அவர் பதவி விலக வேண்டும். இதுதான் சர்வதேச சம்பிரதாயமாகும்.
அவ்வாறு செய்யாமல் பொறுப்பை ஏற்பதாகக் கூறுவது ஏற்புடைய விடயம் அல்ல.
இந்தியாவில் ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து, துறைசார் அமைச்சர் பதவி விலகினார். விபத்துக்கு அவர் காரணம் இல்லை என்றபோதிலும், பொதுநலவாய சம்பிரதாயத்துக்கு மதிப்பளித்து அவர் பதவி விலகினார்.
எனவே, நீதி அமைச்சர் முழுமையாக அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சின் செயலாளரும் பொறுப்பு கூறவேண்டும். “ என்று குறிப்பிட்டார்.










