‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு’

” பெருந்தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது அமைச்சு இருக்கின்றது. எதிர்காலத்திலும் அம்மக்களின் நலன் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு வரவேண்டும். இது தொடர்பில் இரு தரப்பினரிடமும் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபாவை வழங்காததால்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை எமது பக்கத்தில் இருந்து நாம் முழுமையாக மேற்கொண்டுள்ளோம்.” – என்றார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறவில்லை. எனவே, கம்பனிகளை அழைத்து அரசு பேச்சு நடத்த வேண்டும் என அமைச்சரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles