பேராதனை பல்கலைக்கு பூட்டு!

நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி வீடுகளுக்குச் செல்லுமாறு பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது என்றும் துணைவேந்தர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles