பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles