‘மக்கள் பட்டினியில்….’ – பதவி துறக்க தயாராகும் ஆளுங்கட்சி எம்.பி.!

” நாட்டு மக்கள் எங்களைத் திட்டுகின்றனர். ஜனாதிபதியை நேரில் சந்தித்து, இது தொடர்பில் முறையிடவுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லலித் எல்லாவல.

” நான் பிரதேச சபை உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போது மக்கள் என்னை திட்டவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். மக்கள் திட்டுகின்றனர். காரணம், மக்கள் நெருக்கடியில் உள்ளனர். பட்டினியில் வாழ முடியாது. எனவே, ஜனாதிபதியை சந்தித்து இந்நிலைமையை தெளிவுபடுத்தவுள்ளேன். பின்வரிசை எம்.பிக்கள் என்போர் அரச புகழ் பாடுபவர்கள் அல்லர். எனவே, காத்திரமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், நாங்கள் முவொன்றை எடுக்க நேரிடும் ” -எனவும் லலித் எல்லாவல குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles