மக்கள் மனநிலையை அறிய குறைந்தபட்சம் உள்ளாட்சிசபைத் தேர்தலையாவது அரசு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் கால எல்லையை அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்தார்.
