மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் பெண்ணொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமது கணவரால் தாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
ஆரையம்பதி – மாவிலந்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரத்தினம் சோதிமலர் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு மனைவியை அடித்துப் படுகொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடியுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.










