மலையகத்தில் குருடர்களே அரசியல் செய்கின்றனர் – ரமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு

” கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று (20.02.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்குவதற்கு சுமார் ஆயிரம் டொன் மாவு தேவை. இவ்வாறு மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படுவதால் அரசுக்கு மாதம் ஆயிரத்து 200 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. வருடம் சுமார் 1400 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது.

அரசுக்கு நிதி பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகள் உள்ளன. அப்படி இருந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த அரசு நேசக்கரம் நீட்டுகின்றது. இதையும்கூட சிலர் இன்று விமர்சிக்கின்றனர். அமைச்சரவைக்கு சென்றது குறித்தும் நகைச்சுவையாக கதைக்கின்றனர். நல்லாட்சியின்போது 50 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றனர். அது நடந்ததா? இல்லை.

அதேவேளை, ஜீவன் தொண்டமான் ஒன்றுமே செய்யவில்லையென சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் குருடர்களாகவே இருக்க வேண்டும். சுயதொழில் ஊக்குவிப்பு உட்பட மலையகத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  மக்களை அடிப்படையாகக்கொண்டே நாம் செயற்படுகின்றோம். மாறாக கட்சி பேதம் எம்மிடம் இல்லை. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles