” ஊடகத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.” – என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” உள்நாட்டு ஊடகங்களிலும், வெளிநாட்டு ஊடகளிலும் நீண்ட நாட்களாக இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் அவல நிலைமைகளையும் அரசியவாதி களின் அரசியல் வேடங்களையும் ஊடகதுறை மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மாமனிதர் என்றே கூறலாம்.
அதேபோல இந்த நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தில் வடகிழக்கு மக்கள் அனுபவித்த துன்பத்துயரங் களை ஊடகதுறை மூலம் துணிந்து நின்று செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர். பக்க சார்பற்று சமூகங்களின் நிலைபாட்டை தனது எழுத்து துறைமூலம் வெளிபடுத் தியவர். அவரின் இறுதி மூச்சி இருக்கும் வரை சமூக நலனுக்காக ஊடகதுறை மூலம் சேவையாற்றி பல பாராட்டுகளை பெற்றவர்.
மலைநாட்டிலிருந்து வவுனியாவிற்கு செல்லும் மலையக ஊடகவியளார் களை மிகவும் அன்பாக வரவழைத்து மலையகத்தில் வாழும் மக்களை பற்றி நன்கு விசாரித்து அன்பாக உபசரித்து அனுப்பிவைக்கும் நற் பன்பு படைத்த மூத்த ஊடகவியலாளரான அமரர் திரு மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு எங்களுக்கு பேதிர்ச்சியை தந்துள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு மலையக மக்கள் சார்பாக நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.










