மார்புக்கச்சைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணொருவர், 100 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி சப்புமல் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹெரோயின் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த 5 ஆம் திகதி இரவு , லிஸ்ட்டா என்ற மோப்பநாய் சகிதம் சென்ற பொலிஸார் வீட்டை சோதனையிட்ட போது அறையொன்றிலிருந்த கட்டிலை, லிஸ்ட்டா மோப்பம் பிடித்தபோதும் அங்கு எதுவும் இருக்கவில்லை.
பின்னர், பெண் பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை சோதனையிட்டபோது அவரது மார்பு கச்சையிலிருந்து ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபரான பெண்ணை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










