மின்சார கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மின்சாரத்துறை ஒன்றரை அல்லது இரண்டு வருட காலப்பகுதிக்குள் மறுசீரமைக்கப்படும். அந்த அடிப்படையில் மின்சார கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்படும். இதற்கு சிறிது காலம் தேவை. எரிபொருள் விலையைக் குறைப்பதற்கும் சிறிது காலம் அவசியம்.
நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும். பொருளாதாரம் நிச்சயம் கட்டியெழுப்படும்.
நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் அழும் வகையில் எமது வெற்றி அமைய வேண்டும்.” – என்றார் ஜனாதிபதி.