மெக்சிகோவிலிருந்து அனுப்பட்ட ‘நத்தார்’ பொதிக்குள் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

சுமார் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 650 கிராம் “ஐஸ்”, போதைப் பொருள், இலங்கை சுங்க பிரிவின் போதை வஸ்து கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் நேற்று (14) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

மெக்சிகோவிலிருந்து மாத்தறை பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட பொதிக்குள் இருந்தே ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நத்தார் பொதி என்ற போர்வையிலேயே, நத்தார் தின ஆடைகள் அடங்கிய பொதிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைக்கப்பட்டு அனுப்பட்டுள்ளது.

குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles