பஸில் ராஜபக்ச பதவி விலகியதால் வெற்றிடமாக உள்ள தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு , தம்மிக்க பெரேராவை நியமிக்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, தம்மிக பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
எம்.பியானதும், அவருக்கு முக்கிய அமைச்சு பதவி கையளிக்கப்படவுள்ளது. அதற்கான வர்த்தமானிகூட இன்று வெளியானது.
