யாழ். வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

யாழ். வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்பினரால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. பலாலி அன்ரனிபுரத்தில் இதற்கான நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தினரிடமிருந்து காங்கேசன்துறை மத்தியில் (ஜே/234) வெளிச்சவீட்டிலிருந்து துறைமுகம் வரையிலான பிரதேசத்தில் 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 26 ஏக்கர் காணியும், அதே கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு அமைந்துள்ள 24 ஏக்கர் காணி விடுவிக்கப்படுகின்றது. இது 45 குடும்பங்களுக்குச் சொந்தமானது.

மயிலிட்டி வடக்கு (ஜே/246) கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் காணியும், பலாலி வடக்கு அன்ரனிபுரத்தில், பருத்தித்துறையில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக 13 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

நகுலேஸ்வரம் (ஜே/245) இல் 20 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles