” ரணில் விக்கிரமசிங்கவின் மூளையையும், மஹிந்த ராஜபக்சவின் உடலையும் ஒன்றாக இணைத்தால் நாட்டுக்கு பாரிய சேவை செய்ய முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டிய தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்க. அவரின் வருகையை முன்னிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். விமர்சனங்கள் இருந்தாலும் ரணிலும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார். அதனை மறக்ககூடாது. “
இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க அபயராம விகாரைக்கு சென்று முறுத்தெட்டுவ ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றார். இதன்போதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
அதாவது ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறந்த மூளை உள்ளது, மஹிந்த ராஜபக்ச மக்களால் விருப்பப்படும் தலைவர். இவர்கள் இருவரும் இணைந்தால் நாட்டுக்கு நல்லது என மக்கள் கருதுகின்றனர் என்பதையே மேற்படி கூற்றின் ஊடாக தேரர்கூற விளைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.










