ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு புத்திரசிகாமணி பதிலடி

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் முறையிடுவதால் தீர்வு ஏற்படப் போவதில்லை என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தை ஐ.எல்.ஓ கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தெரிவித்ததையடுத்தே புத்திரசிகாமணி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஒரு பொலிஸ் அல்லது நீதிமன்ற அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. அவர்களால் தீர்ப்பு கூறவோ அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவோ முடியாது.

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளோம் என ஊடகங்களில் தொழிற்சங்கங்கள் செய்திகள் வெளியிடுவதன் மூலம் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது .

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு ஒரு முறைப்பாடு கடிதம் அனுப்பினால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடமும் அரசாங்கத்திடமும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவார்கள்.

அதற்கு சம்பந்தப்பட்டவர்களும் அரசாங்கம் கூறும் பதிலை புகார் செய்தவர்களுக்கு அனுப்பிவைப்பார்கள். அல்லது வருடாந்தம் நடைபெறுகின்ற மாநாட்டில் சமர்ப்பித்து இலங்கை அரசாங்க பிரதிநிதிகளின் கூற்றை அறிக்கையாக தயாரித்து முறைப்பாடு செய்தவர்களுக்கு பதிலாக அனுப்பி வைப்பார்கள்.

இந்த அரசாங்கத்தின் கூற்று ஏற்கனவே சம்பள நிர்ணைய சபையில் எடுக்கப்பட்ட முடிவாகதான் இருக்கும். தொழிற்சங்கங்கள் வெறுமனே இப்பிரச்சினையை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனிடத்திடம் சமர்ப்பித்தோம் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

சம்பள நிர்ணைய சபையில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்களை கம்பனிகள் நிறைவேற்றாமல் விட்டால் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

கூட்டு ஒப்பந்தங்களில் செய்துகொள்ளப்பட்ட சலுகைகளையும் உரிமைகளையும் குறைக்க முடியாது. அதன்படி தொழிலாளர்களிடம் சந்தா பிடிக்க முடியாதென கூறமுடியாது. தொழிலாளர்களுடைய வேலைப்பளுவை அதிகரிக்கவும் முடியாது என அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles