முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரி (டிசைன்) திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுப செய்தியை வெளியிடுகின்றேன்.
அதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
