வருகிறார் ரஞ்சன் – விடுதலை ஆவணத்தில் முக்கிய புள்ளி கையொப்பம்

சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் குறித்த ஆவணத்தில் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ரஞ்ஜன் ராமநாயக்க இன்று அல்லது நாளை பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரி நீதிமன்றத்திடம் சத்திய கடதாசி கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles