வாக்குச் சீட்டை படமெடுத்தால் 7 ஆண்டுகள் தடை!

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குச் சீட்டுகளை படம் எடுக்கக் கூடாது. இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பாராளுமன்ற அலுவலகத்துக்கு அறிவித்துள்ளார்.

எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை நிரூபிப்பதற்காக இன்று வாக்குச் சீட்டை படம் எடுக்குமாறு சில கட்சித் தலைவர்கள் தங்கள் எம்.பி.க்களுக்கு அறிவித்துள்ளதாக நேற்று முற்பகல்செய்திகள் வெளியாகின.

பாராளுமன்ற அலுவல்கள் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் எழுப்பப்பட்டபோது, ​​சபாநாயகர், ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 20 ஆவது பிரிவின்படி. 1981 ஆம் ஆண்டின் 02 இலக்க சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களை செல்வாக்கு செலுத்துவது அல்லது வற்புறுத்துவது வாக்களிப்பு தொடர்பான விதிகளை மீறுவதாக அமையும் .

இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு என்பதால், எம்.பி. ஒருவரின் வாக்குச்சீட்டை புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் பாராளுமன்ற அமர்வுக்கு தடை விதிக்கப்படுமென்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles