வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட மன்னிப்பு காலம்!

பொதுமக்கள் தம்வசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு இந்த நடைமுறை அமுலிலிருக்கும்.

இதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் இந்த வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியும். அத்துடன், உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அங்கீகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் விற்பனை செய்ய முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நிய செலாவணி திணைக்களத்தின் 011-2 477 255, 011-2 398 511 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles