ஹட்டனில் நடு வீதியில் குடை சாய்ந்தது உழவு இயந்திர பெட்டி – 9 புகையிரத ஊழியர்கள் காயம்

புகையிரத ஊழியர்கள் பயணித்த உழவு இயந்திரத்தின் பெட்டி நடு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தி பகுதியில் இன்று 18 திகதி பிற்பகல் 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பகுதியில் புகையிரத பணிக்காக உழவு இயந்திரத்தில் அழைத்துவரப்பட்ட குறித்த ஊழியர்கள் வேலை முடிந்து மீண்டும் நாவலப்பிட்டிய நோக்கி பயணித்து கொண்டிருந்த போது உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று வீதியில் குடை சாய்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles