10 மாதங்களுக்குள் ரூ. 19 கோடிக்கு மேல் அடகுவைப்பு!

நாட்டிலுள்ள சுமார் 40 லட்சம் பேர் இவ்வருடத்தில் முதல் 10 மாத காலத்தில் 19, 300 கோடி ரூபாவுக்கு தமது தங்க ஆபரணங்களை பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அடகு வைத்துள்ளதாக ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக பொருளாதார மற்றும் புள்ளிவிவர மதிப்பீட்டு பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோறள இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள், 13 நிதி நிறுவனங்கள் மற்றும் 10 அடவு பிடிக்கும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related Articles

Latest Articles