12 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு கைது!

12 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு ஒருவரை கிராம மக்கள் பிடித்து, ஹல்துமுள்ளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து, சிறுவனின் தந்தை ஹல்துமுள்ளைப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இம் முறைப்பாட்டின் அடிப்படையில், குறிப்பிட்ட மதகுரு கைது செய்யப்படுமுன், கிராம மக்களினாலே, அம் மதகுரு பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன், பிரதேச அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களினால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மதகுரு விசாரணையின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles