அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய திருப்பம்: சபாநாயகர் பதவியை அலங்கரிக்கத் தயாராகும் முதல் கறுப்பினத் தலைவர்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்காக உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பின நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுச் சாதனையை ஹக்கீம் ஜெப்ரிஸ் Hakeem Jeffries படைத்துள்ளார்.

வொஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உள்ளக வாக்கெடுப்பில், 56 வயதான நியூயோர்க் நாடாளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் ஜெப்ரிஸ், ஜனநாயகக் கட்சியின் சபாநாயகர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றிகளைப் பெற்று, அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்ற சில வாரங்களுக்குப் பின்னர் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக, தனது தலைமைத்துவம் தொடர்பில் கட்சியின் முற்போக்குச் சார்பு உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், கட்சி உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பகிரங்கமாகப் பதிவு செய்யும் வகையில் வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜெஃப்ரிஸ் தெரிவித்திருந்தார்.

2023ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பணியாற்றிவரும் அவர், எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி புதிய காங்கிரஸ் பதவியேற்கும்போது குடியரசுக் கட்சியின் மைக் ஜோன்சனுக்குப் பதிலாக சபாநாயகர் பதவியை ஏற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles