15 வயது சிறுமியை கடத்திய காதலனும், சித்தியும் கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வாக ரையில் வைத்துத் தாம் கைது செய்துள் ளமையுடன் சிறுமியை மீட்டு வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர் எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்த னர்.

இந்தப் பொலிஸ் பிரிவிலுள்ள சிறுமி கடந்த 7 ஆம் திகதி பாடாலைக்குச் சென்ற நிலையில் அவர் வீடு திரும் பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.பி. விமலரத் தினவின் வழிகாட்டலில் பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் பி.சசீந்திரன் தலை மையிலான சிவகுமார், பெண் பொலி ஸாரான அனங்சியா, ராதிகா உட்பட்ட பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த சிறுமியை அவரது காதலன் வாகரைப் பிரதேசத் திலுள்ள அவரது சிறியதாயாரின் வீட்டிற்குக் கடத்திச் சென்று வைத்துள்ளார் எனக் கண்டறிந்த பொலிஸார் நேற்று முதினம் இரவு வாகரையில் சிறுமி தங்கவைக்கப்பட்ட வீட்டை சுற்றுவளைத்து முற்றுகையிட்டு, சிறு மியை மீட்டமையுடன் சிறுமியைக் கடத் திய குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுக் காதலன் மற்றும் சிறுமிக்கு இடம் கொடுத்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய சிறிய தாயார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில் மீட்கப்பட்ட சிறுமியை வைத்தி யசாலையில் அனுமதித்தமையுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக் களப்பு பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலி ஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

Related Articles

Latest Articles