17 ஆம் திகதி யாழ். செல்கிறார் ஜனாதிபதி!

உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வடக்கு மாகாணத்தில் வெற்றிநடை போடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முழுவீச்சுடன் செயற்பட்டுவருகின்றது.

தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் வடக்குக்கு படையெடுத்து தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என தெரியவருகின்றது.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே அவரது வருகை அமையவுள்ளது.

கிட்டு பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் யாழ்.சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

அத்துடன், அடுத்து வரும் நாட்களில் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்களும் வருகை தரவுள்ளனர்.

Related Articles

Latest Articles