180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் சர்வதேச நிறுவனமொன்றின் தலைவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கலாநிதி பட்டம் பெற்ற சர்வதேச நிதி நிறுவனமொன்றின் தலைவர் என்பதை காட்டும் போலி ஆவணங்களையும் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

59 வயதுடைய துனீசிய பிரஜையான குறித்த சந்தேக நபர், தனது கைப்பையில் கொகேய்னை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் துனீசியாவிலிருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து தோஹாவிற்கு சென்று பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பயணியொருவரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடிய கொகேய்ன் தொகை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கொகேய்னுடன் குறித்த சந்தேக நபரை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles