” 200 வருடங்களாக இந்நாட்டுக்காக உழைத்தும் ‘முகவரி’கூட இன்றி வாழ்கின்றனர் மலையக மக்கள்” – டிலான் பெரேரா கவலை

” மலையக மக்கள் இந்நாட்டுக்காக 200 வருடங்களாக உழைத்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கென ஒரு முகவரிகூட இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

” வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களைவிட மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கே அதிகம் பிரச்சினை உள்ளது. அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினால்கூட முகவரி இல்லை. தோட்ட அலுவலகத்துக்குதான் கடிதம் வரும், அங்கிருந்துதான் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

200 வருடங்கள் இந்நாட்டுக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். காணிஉரிமைக்கூட இல்லை. இவை குறித்தும் நாம் பேச வேண்டும்.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles