2023 தேர்தல் வருடம் – வெற்றிவாகைசூட தயார் என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி

” 2023 ஆம் ஆண்டு தேர்தல் வருடமாகும். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களையும் நாம் பிரயோகிப்போம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு , பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், நாட்டை மீட்பதற்கான மாற்று திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தி வசமே இருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

2023 இல் முக்கிய தேர்தல்கள் நடைபெறும். அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்குவோம். அதில் எமது கட்சி வெற்றிபெறும் எனவும் கூறினார்.

Related Articles

Latest Articles