2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மூன்று லட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் ஒரு கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 916 பேரே வாக்களித்திருந்தனர். வாக்கு பதிவு (79.46 சதவீதம்)
கடந்த ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிராகரிக்கப்பட்ட வாக்கு வீதம் அதிகரித்துள்ளது.
இலங்கையில் 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், 1.22 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 2.31 சதவீத வாக்குகளும், கடைசியாக 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 0.85 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இம்முறையே நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2 சதவீதத்தைக் கடந்துள்ளது.